திருவண்ணாமலை,
1186 மதிப்பெண் எடுத்த என் மகனுக்கு ஏன் சீட் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் மாணவரின் தந்தை பாஜக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பாஜக ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்ததது. இந்த நிலையில் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஐயப்பன் என்பவர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தனது மகன் பாலாஜி +2 தேர்வில் 1186 பதிப்பெண் பெற்றுள்ளதாகவும், ஆனால் நீட்டில் மார்க் குறைந்ததால் மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜக மத்திய அரசுதான் காரணம் என்றும் கூறி அவர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பாஜகவினர் ஐயப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் ஐயப்பனை மட்டும் கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். பாஜகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

Leave A Reply