சென்னை,

ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதா என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து முசிறியை சேர்ந்த தங்கவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லம் சொத்து குவிப்பு வழக்கு பட்டியலில் உள்ளதா என தமிழக அரசு வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply