ஜெய்பூர்;
ராஜஸ்தான் மாநிலத்தில் சங்பரிவார் அமைப்புகளின் பிடியிலிருந்த கல்லூரிகளில் ஏபிவிபியை தோற்கடித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் முடிவுகளின்படி 21 கல்லூரிகளில் எஸ்எப்ஐ மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஹனுமன்கர் மாவட்டம் நேரு மெமோரியல் கல்லூரியில் எஜ்எப்ஐ மாநில தலைவர் மகேந்திரகுமார் வர்மா வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 4 கல்லூரிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

சென்ற ஆண்டு அம்மாநிலம் சிகாரில் நடந்த எஸ்எப்ஐ அகில இந்திய மாநாட்டில் பெரும் எழுச்சியுடன் மாணவர்கள் அணி வகுத்த நிலையில் இந்த வெற்றியை தற்போது எஸ்எப்ஐ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் எஸ்எப்ஐ பெற்றுள்ள வெற்றி கல்லூரி வளாகங்களில் தொடர்ச்சியாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்ஙகளின் வெற்றி என அம்மாநில எஸ்எப் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர் களுக்கு எஸ்எப்ஐ மத்தியக் குழுவும், ராஜஸ்தான் மாநிலக்குழுவும் வாழத்துக்களை தெரிவித்துள்ளது.

Leave A Reply