சென்னை,

சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை மின்சாரம் தாக்கி தாயும் , 6 மாத குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சிவா என்பவரின் மனைவி அருணா மற்றும் 6 மாத குழந்தை திவான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.   இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக சுவற்றில் மின்கசிவு ஏற்பட்டு அது மின்விசிறியில் பரவி உள்ளது.

இதனை அறியாமல் அருணா மின்விசிறியை இயக்கிய போது மின்சாரம் தாக்கியது.  இதில் அருணாவும் அவரது கையில் இருந்த 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply