தில்லி: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு செப் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பான விவரங்கள் வருமாறு:

மொத்த காலிப்பணியிடங்கள்: 700

மண்டலங்கள் வாரியான காலிப்பணியிடங்களின் விவரம்:
1. எஸ்எஸ்சி மேற்கு மண்டலம் – 75
2. எஸ்எஸ்சி கிழக்கு மண்டலம் – 97
3. எஸ்எஸ்சி மத்திய மண்டலம் – 27
4. எஸ்எஸ்சி தெற்கு மண்டலம் – 61
5. எஸ்எஸ்சி வடகிழக்கு மண்டலம் – 13
6. எஸ்எஸ்சி வடமேற்கு மண்டலம் – 66
7. எஸ்எஸ்சி வடக்கு மண்டலம் – 244
8. எஸ்எஸ்சி கர்நாடகா மண்டலம் – 42
9. எஸ்எஸ்சி மத்திய பிரதேச மண்டலம் – 13

தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு முதல் ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களை அறிய அதற்கான அறிவிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு:  18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்

தேர்வு கட்டணம்: ரூ.100 ஆன்லைன் முறையில் செலுத்தலாம்

விண்ணப்பிக்கும் முறை: மண்டலங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் அதற்குரிய மண்டலங்களின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி நாள்: செப்டம்பர் 24, 2017

மேலும் இதுதொடர்பான முழுவிவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave A Reply