போபால்,

மத்தியப் பிரதேசத்தில் கன்று குட்டி உயிரிழந்ததற்காக பெண் ஒருவரை ஒரு வாரம் பிச்சை எடுக்க கிராம பஞ்சாயத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மடாடின் கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தனது வீட்டிலிருந்த தாய்ப்பசுவிடம் நின்று கொண்டிருந்த கன்றுக்குட்டியின் கழுத்திலிருந்த கயிற்றை பிடித்து இழுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு, கழுத்தை இறுக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது. இது குறித்து விசாரித்த உள்ளூர் கிராம பஞ்சாயத்தினர், கன்று இறந்து போனதற்காக, கமலேஷ், ஒரு வாரம் அருகில் உள்ள கிராமங்களில் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கங்கை நதிக்கு சென்று அங்கு மூழ்கி வர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார் என உத்தரவிட்டது.

இது தொடர்பாக கமலேஷ் மகன் அணில் ஸ்ரீவாஸ் கூறுகையில், கடந்த சில நாட்களாக கிராமத்தினர் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். பஞ்சாயத்து நடந்த போது, பயம் காரணமாக அங்கிருந்த மக்கள் யாரும், தீர்ப்புக்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. தற்போது எனத் தாய் வேறு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கியுள்ளார். தினமும் பிச்சையெடுத்தார். தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இது குறித்து அப்பகுதி காவலர்கள், இந்த சம்பவம் தொடர்பாக யாரும்
புகார் அளிக்காததால், வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட யாராவது புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என கூறினர்.

Leave A Reply