லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஜீனைத் (8) என்ற சிறுவன் தனது பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருக்கும் துப்பாக்கியுடன் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட எண்ணி செல்பி எடுத்துள்ளார். அப்போது செல்போனில் கிளிக் செய்வதற்கு பதிலாக எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் குண்டு தலையில் பாய்ந்து ஜீனைத் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply