நாடு முழுவதும் நரேந்திர மோடியே நாட்டின் ரட்சகர் என்ற தொனியில் பாஜக போலியான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. இந்த போலி பிம்பத்தை தூக்கி பிடிக்க பாஜக மூத்த தலைவர்கள் பலரையும் ஓரம் கட்டி மோடி பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறார். ஆனால் அவ்வப்போது அவரது தில்லு முல்லு அம்பலமாகி வருகிறது.

நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 32 கோடி 7 லட்சத்து 87 ஆயிரத்து 69 பேர் பின்தொடர்வதாக பாஜக பெருமை பேசி வந்தது. இந்நிலையில் இதனை ஆய்வு செய்த டுவிட்டர் கணக்கு தணிக்கை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம் மோடியை பின்தொடரும் 32 கோடி பேரில் 45 சதவிகிதம் பேர் போலிகள் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது 14 கோடியே 4 லட்சத்து 91 ஆயிரத்து 884 பேர் போலிகள் என்பதை கணக்கு தணிக்கை குழு உறுதி செய்தது. இது தவிர்த்து பல்வேறு கார்ப்பரேட் ஐடி நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை மோடிக்காக உருவாக்கி அவர்களே அந்த வேலையையும் செய்து வருகின்றனர்.

இதுதவிர இந்திய அரசின் பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் மோடியை பின்தொடர வேண்டும் என வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் பல லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இப்படி பின்தொடர கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர் என்பதும் தனிக்கதை. இதனையும் முறையாக கணக்கிட்டல் இப்போது இருப்பவர்களில் நான்கில் ஒருபங்கு மோடியை உண்மையாக பின்தொடர்பவர்களாக இருப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் அமெரிக்க அதிபர் டிரம்பை பின்பற்றுபவர்களுக்கும் 45 சதவிகிதம் பேர் போலிகள் என்று டுவிட்டர் தணிக்கை அளிக்கை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பாஜக தலைவர்களில் பலர் உலகில் ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மோடியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று தம்பட்டம் அடிப்பதும், பின்னர் இணையவாசிகள் அதை அம்பலப்படுத்துவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் எந்த சஞ்சலனமும் இல்லாமல், மீண்டும் மீண்டும் அதே வேலைகளை சங்கபரிவார் அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலே போய் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் நடந்த பெண் மீதான தாக்குதல் என்று கூறி திரைப்படத்தின் புகைப்படத்தை வெளியிடும் அளவிற்கு சென்று மீண்டும் அசிங்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாம் தங்களுக்கு எதிராக கருத்துக்கூறிய பெண்கள் மீது வக்கிரம் நிறைந்த பாலியல் சார்ந்த அவதூறுகளை முன்நிறுத்துவது மோடியின் பாஜகவிற்கு புதிதல்ல என்பதையும் அவ்வாறு அவதூறு பரப்புபவர்களை மோடியே ஊக்கு விப்பதையும் சுவாதிசதுர்வேதி வெளியிட்ட புத்தகம் அம்பலப்படுத்தி உள்ளது. இதையெல்லாம் அவர்கள் சட்டை செய்து கொள்வதேயில்லை. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் முன் நிறுத்துவதால் அது உண்மையாகும் என்ற கோயபல்ஸ் தியரியை முன்னிறுத்துவதிலேயே குறிக்கோளாக உள்ளனர். மோடி முன்மொழிந்த டிஜிட்டல் இந்தியாவில் தற்போது மோடி மஸ்தான் வேலையும் அம்பலமாகியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: