மும்பை,

பிரதமர் மோடிக்கு கேள்வி கேட்டாலே பிடிக்காது என மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி., நானா படோல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சமீபத்தில் விவசாயிகள் துயர் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மகாராஷ்டிரா பாஜக எம்.பி., நானா படோல் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பாஜக நாடாளுமன்ற கூட்டங்களில் மோடி தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் யாராவது அவரிடம் கேள்வி கேட்டால் கோபமடைந்து எரிச்சலாகி விடுவார். பலமுறை இதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஒரு முறை கூட்டத்தில் பசுமை வரி, ஓபிசி அமைச்சகம், விவசாய முதலீடு அதிகரிப்பு ஆகியவைகளை குறித்து எனது ஆலோசனைகளை கூறினேன். உடனே எரிச்சலடைந்த மோடி என் மீது கோபப்பட்டு என்னை எதுவும் பேச வேண்டாம் என கண்டித்தார். மகாராஷ்டிரா மாநில முதல்வரால் மாநிலத்திற்கு தேவையான நிதி உதவிகளை பிரதமரிடம் கேட்டு பெற முடியவில்லை. நமது மாநிலத்தில் இருந்து அதிகபட்ச நிதி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் அந்த அளவிற்கான நிதி உதவி நம் மாநிலத்திற்கு கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பிரதமரை சந்திக்கவே முதல்வர் பயப்படுகிறார். முதல்வர் மட்டும் அல்ல மத்திய அமைச்சர்களும் பிரதமரிடம் ஒரு பயத்தில் தான் உள்ளனர். நான் அமைச்சராக விரும்பவில்லை. நான் பிரதமரின் ஹிட்லிஸ்டில் இருந்து அதற்காக நான் பயப்படவில்லை என கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: