புதுதில்லி;
பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை கடந்த மூன்றாம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், கேரளத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள அல்போன்ஸ் கன்னன் தானம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், பாஜக ஆட்சி செய்யும் கோவா போன்ற மாநிலங்களிலேயே மாட்டிறைச்சி சாப்பிடப்படும் போது, கேரளாவில் மாட்டிறைச்சி உண்ணுவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று கன்னன்தானம் கூறியுள்ளார். எந்தவொரு இடத்திலும் பாஜக உணவை தீர்மானிக்க முடியாது; இது மக்கள் தேர்வு செய்யக்கூடியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: