எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கும் அனிதாக்களின் ஆன்மாக்கள் அந்த நேரம் சாந்தியடைந்து கொண்டிருக்கும்…
———————————————————————-
ஒருபக்கம் அரசு பள்ளிகளை மூடிக்கொண்டே இன்னொரு பக்கம் ‘நீட்’ ஆயுதத்தால் பெரும்பான்மை மாணவர்களை அச்சுறுத்தி coaching center பக்கம் திசைதிருப்பி எதிர்ப்பே இல்லாமல் கல்லா கட்ட முழு வீச்சில் அரசாங்கம் இறங்கிவிட்டால் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு என்னாகும்? பள்ளிக்கூடங்கள் இல்லாது போனால் ஆசிரியர்களுக்கு என்ன வேலை? Coaching center ல் வேலைக்குச் சேர்ந்து கொள்ள முடியுமா?

அங்கெல்லாம் தாம்பாளத் தட்டில் ஆசிரியர்கள் காலைத் தூக்கி வைத்து கழுவி, மஞ்சள், குங்குமம் வைத்து கண்ணில் ஒத்திக் கொள்ளும் ஏற்பாடும் கிடையாது, ஏமாளிகளும் கிடையாதே..

ஆகவே மாணவர்கள், பெற்றோர்களைக் காட்டிலும் அதிகமான அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் ஆசிரியர்கள் தான் தெருவில் இறங்கி போராட வேண்டும். கால்கள் கழுவித் தொழுதவன் ஆசிரியர்கள் தலைக்கு குடை பிடிக்கத் தானும் இறங்குவான் “நீட்” டுக்கு எதிராக!. பிள்ளைகளோடு சேர்த்து ஆசிரியருக்கும் சோறு கட்டி வந்து தானும் சேருவார்கள் பெற்றோர்கள்! எதிர்கட்சித் தலைவர்கள் தரையில் சம்மணமிட்டு அருகில் அமர்ந்து ஆதரவு பேட்டிகளை தொலைக்காட்சிகளுக்குத் தந்து கொண்டிருப்பார்கள். அந்தப் “பொதுக்கூட்டத்தை” சமூகமே சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும். குண்டாஸ் போட்டால் எத்தனை பேர் மீது போடுவதென அரசே குழம்பும்!

உண்மையான ‘ஆசிரியர்தினம்’ அங்கு எழுச்சியோடு கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கும் அனிதாக்களின் ஆத்மாக்கள் அந்த நேரம் சாந்தியடையும்!!

Suseela Anand

Leave A Reply

%d bloggers like this: