திருப்பூர்,

உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ,அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க கோரி மத்திய மாநில அரசு களை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டதில் மத்திய மாநில அரசு களை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

Leave A Reply