திருப்பூர், செப்.5-
நீட் தேர்வைத் திணித்ததால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட மாணவி அனிதாவின் மறைவுக்கும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தர்மபுரி மாவட்டம் ஜீவா, கஜேந்திரன் ஆகியோர் மறைவுக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திருப்பூர், பல்லடத்தில் இரங்கல் தெரிவித்தனர்.

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், நிர்வாகிகள் வாலீசன், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் இரங்கல் உரையாற்றினார். பல்லடத்தில் நடந்த நிகழ்வில் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: