மதுரை,

புளூவேல் கேமை பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த வாரம் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்று. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி, இந்த ஆன்லைன் விளையாட்டுக்கான இணைப்பு ஷேர் இட் மூலமாக பகிரப்படுகிறது. அரசும், காவல்துறையும் இந்த விளையாட்டு குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், புளூவேல் விளையாட்டு பகிரப்படுவதைத் தடுக்க அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புளூவேல் கேமை ஷேர் இட், பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave A Reply