நாகை,

நாகையில் இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது. அண்மையில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஞாயிறன்று மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த 6 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். மேலும் துறைமுகத்தில் நின்றிருந்த 3 படகுகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதனிடையே மீண்டும் ஞாயிறு இரவு மருத்துவமனையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாகை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply