சென்னை,

நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி, பாடம் நாராயணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.  விசாரணையை அடுத்து,  வரும் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  வேட்பாளர் குற்றப்பின்னனி குறித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

Leave A Reply