திருப்பூர், செப்.4-
திருப்பூர் கிளைச் சிறையிலிருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பியோடிய விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர், குமரன் சாலையில் உள்ள நீதிமன்றத்தை ஒட்டி திருப்பூர் கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. சிறையில் விசாரணையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்பட்டோர் இங்கு அடைத்து வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சிவணான்டி என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (36), திருப்பூர் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கிளைச் சிறை வளாகத்திலிருந்து தப்பியதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரஞ்சித்குமாரைத் தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: