சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மேலும் 31 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறன.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தியுள்ளது. இந்த 800 கல்லூரிகளிலும் எந்த ஒரு மாணவரும் சேராத நிலையில், இந்த கல்லூரிகளை மூட அறிவுறுத்தியுள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் அணில் தத்தாதியா கூறியுள்ளார்.

அதன்படி தமிழகம் – 31, கர்நாடக – 21, தெலுங்கானா – 64, ஆந்திரா – 29, மகாராஷ்டிரா – 59, உத்தரப் பிரதேசம் – 47, அரியானா – 31, ராஜஸ்தான் – 30, குஜராத் – 29, மத்தியப் பிரதேசம் – 21, பஞ்சாப் – 19 கல்லூரிகள் மூடப்பட உள்ளன.

ஏஐசிடிஇ இணையதளத்தில் உள்ள தகவல் படி 2014 – 2017 வரை 410 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply