குழித்துறை;
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை குமரி மாவட்டத்தில் இன்று  உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புலி வேஷமிட்டும், கடுவாப்புலி ஆட்டம் மற்றும் எறிபந்து, உறியடி, கிளியாந்தட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். பெண்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.

கேரளத்தைப் போலவே, அதை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, பளுகல், குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், திற்பரப்பு, பத்மநாபபுரம், கொல்லங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

குமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இப் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply