108 ல ஏத்தி உடுங்கப்பா..

இளம் வயதிலேயே
இயக்கத்திற்கு வந்து..

பல பொறுப்புகளில்
இருந்து பணியாற்றி..

இயக்க வாழ்வுக்காக
இல்லற வாழ்வை மறுத்து..

அடி உதை சிறையென
அல்லல்பட்டாலும்
அதை புன்னகையோடு ஏற்று..

பத்தாண்டுகள் சட்டமன்றத்தில்
சமரசமின்றி பணியாற்றி…

லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு
நாக்குமேல பல்லைப்போடு
ஒரு வார்த்தை எவனும்
பேசிவிட முடியாத பொதுவாழ்வை
நடத்தும் ஒருவரை…

பொம்பள….
என புறங்கையால்
தள்ளிவிட நினைக்கும்
ஒரு ஆம்பிளை
டாக்டராகவே இருந்தாலும்
அவர்…

மன நோயாளிதான்..!

  • கருப்பு கருணா

Leave A Reply