செய்தி கேட்டு பதறிப் போய் அரியலூர் செந்துரை போய் சேருகிறோம், அங்கிருந்து அய்ந்து கிலோ மீட்டர் அந்த கிராமம் தோழர்கள் காரில் அழைத்துச் செல்கிறார்கள்..

அறிவியல் வெளிச்சம் அவ்வளவாக படராத மிகப் பின்தங்கிய கிராமம்….

ஒண்டிக் குடிசை மூட்டைத்தூக்கும் தந்தைக்கு நான்கு குழந்தைகள் அதில் ஒரு பெண் குழந்தைதான் அனிதா…!

அடுத்த வேலை உணவுக்கே அல்லாடும் வாழ்க்கை,,,,!

மத்திய அரசின் கல்வித்திட்டத்தை எதிர்த்து முதல் களப் பலியான அனிதாவின் குடும்பப் பிண்னனி இதுதான்…!

அந்த பரிதாபகரமான கிராமத்தையும், அனிதாவின் குடும்பத்தையும் இன்னும் விவரித்துக் கொண்டே செல்லலாம் ஆனால் அதுவல்ல நமது நோக்கம்…!?

வாய்ப்புக் கிடைத்தவுடன் பசுமையான மேய்ச்சல் நிலத்தை தேடிப் போகும் மனிதகளுக்கு மத்தியில், பசியோடும், பட்டினியோடும், தன் வாழ்வாதாரமான ஒரு உயிரையும் பறி கொடுத்து விட்டு,

அந்த ஒடுக்கப் பட்ட குடும்பத்திலிருந்து புரப்பட்ட சுய மரியாதை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது….!

ஆம்…!
அரசு அறிவித்த ஏழு லட்சம் உதவித் தொகையையும், அரசு வேலையையும் வாங்க மறுத்ததோடு இல்லாமல்…

எங்கள் மகள் எதற்காக இறந்தாளோ அந்த நீட்டை தடை செய்வதுதான் எங்கள் மகள் மரணத்திற்கான பரிகாரம் என்றார்களே அதுதான் உழைக்கும் மக்கள் பண்பாடு என்பது…!

பசுமையான மேய்ச்சல் நிலங்களை தேடிச் சென்றவர்களே ஒரு வேலை உங்களுக்கு உரைப்பதற்குதான் அரசின் சலுகைகளை துரந்தார்களோ…!

செத்தப் பிறகும் உயர்சாதிகளின் மூஞ்சில் எச்சில் துப்புகிறாய் அனிதா!

திருச்சி பெரியார் சரவணன்.

Leave A Reply