கோவை, செப். 4-
ஓணம் திருவிழாவை முன்னிட்டு கோவையில் வாலிபர் சங்கத்தினர் அத்தப்பூ கோலப்போட்டியை நடத்தினர். தமிழக மலையாள மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு திங்களன்று கோவை 50 ஆவது வார்டுக்குட்பட்ட சிவானந்தகாலனி பகுதியில் அத்தப்பூ கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் தங்கள் வீடுகளில் பூக்களை கொண்டு போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை நடுவர்கள் மதிப்பெண் வழங்கி தேர்வு செய்தனர்.

இதனையடுத்து செப்.10 ஆம் தேதி வாலிபர் சங்கம் சார்பில் நடைபெறும் ஓணம் விழாவில் பரிசுகள் வழங்க உள்ளதாக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சீலாராஜ், டி.கே.தினேஷன் மொகேரி, உமா மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் டி.ஏ.சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply