2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை.அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள ..
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை.ஆனால் இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை. தோழர் பிரின்சு ,எம்எல்ஏ சிவசங்கர் மீது வீண்பழியை சுமத்துகிறார், பாஜக அதிமுக அரசுகள் வேடிக்கைபார்க்கிறார்கள்.ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத்தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம்.கேப்பையில் நெய்மட்டுமல்ல பொய்யும்கூட வழிகிறதாம்.!

 -Bala Bharathi

Leave A Reply