திருப்பூர், செப்.4-
வாகன ஓட்டுநர்கள் கையில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி திங்களன்று திருப்பூரில் சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கப் பொருளாளர் எல்.தண்டபாணி தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை கண்டித்தும், மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், காவல் துறையின் ஊழலுக்கு வழி செய்யும் அசல் ஓட்டுநர் உரிமம் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பபட்டது.

மேலும், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன், துணைச் செயலாளர் அருண், ஆட்டோ சங்கச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: