லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவமனை பதிவேட்டில் 49 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரூகாபாத் காவல் ஆணையர் , குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த மாதம்  ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பரூகாபாத் மருத்துவமனையில் 49 உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply