#அனிதாமரணமும்#அரசியலமைப்புசட்டமும்

கல்வி-அரசியல் அமைப்பு சட்டப்படி பொது பட்டியலில் உள்ள ஒன்று. மாநில பட்டியலில் இருந்த ஒன்றை காங்கிரஸ்-இந்திய பெருமுதலாளிகளின் தேவைகளுக்காக பொது பட்டியலுக்கு மாற்றியது. அப்படிபட்ட விடயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றினாலும் மாநில சட்டமன்றமும் தனது ஒப்புதலை கொடுக்க வேண்டும்.நீட் விவகாரத்தில் தமிழக சட்டமன்றம் தனியாக சட்டம் இயற்றிய பின் ஏன் எந்த நிலை-மக்கள் மன்றமும், நீதி மன்றமும் இதை விவாதிக்க வேண்டும்.
மாநில சட்டத்திற்கு மத்திய அரசு /ஜனாதிபதி ஏன் ஒப்புதல் தரவில்லை?

அனிதா-வின் மரணத்தை வெறும் உணர்ச்சி பூர்வமான விடயமாக மட்டும் பார்க்காமல் இவற்றின் மொத்த பரிமாணத்தில் நமது தலையீடுகள் திட்டமிடப்பட வேண்டும்.
இப்பவும் உச்ச நீதிமன்றத்தில் இதன் பிரதான வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் சட்ட ரீதியான தலையீட்டை ஆழமாக நடத்த வேண்டும்-மக்களின் பொதுக்கருத்தை உருவாக்குவதில் குன்றுமணி அளவும் குறையாமல்.

சமஷ்டி குடியரசு கோட்பட்டிற்கு விழுந்த சம்மட்டி அடிதான் அனிதாக்களின் உயிரை பறிமுதல் செய்கிறது!

Karumalaiyan

Leave A Reply

%d bloggers like this: