நாகப்பட்டினம்;                                                                                                                                                                                   மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். ஹானஸ்ட் ராஜ் முன்னிலை வகித்தார். ஏராளமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்த் சாமி தலைமையில், மாநகர்க்குழு உறுப்பினர் சண்முகப்பிரியா முன்னிலையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மணலி இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாணவர் குணா தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து, தஞ்சை இரயிலடி வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.

 

Leave A Reply