சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து புல மாணவர்களும் அனிதாவுக்கு நீதி கேட்டு  இந்திய மாணவர் சங்கம் தலைமையில்  வகுப்பு புறக்கணிப்பு  செய்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே போராட்டம் செய்தனர். மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடத்தினர்.  மாணவர்கள் தரையில் அமர்ந்து நீட் தேர்வை  கண்டித்தும், அனிதா மறைவுக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தில் நிரந்தரமாக நீட்டை  தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதே போல் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்பை புறகனித்து போராட்டம் நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: