தில்லி,

மத்திய அமைச்சரவையில் புதியதாக நியமிக்கப்பட்ட 9 மத்திய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உத்தர பிரதேச மாநில எம்.பி. ஷிவ் பிரதாப் சுக்லா மத்திய அமைச்சராகவும்,வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கேபினெட் அமைச்சராகவும், சிவ் பிரதாப் சுக்லா, அஸ்வின் குமார் சவுபே, வீரேந்திர குமார்,ராஜ்குமார் சிங் மத்திய அமைச்சர்களாகவும், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த் குமார் ஹெக்டே மத்திய இணையமைச்சராகவும் பதவியேற்றனர். மேலும் முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஹர்தீப் சிங் மத்திய அமைச்சராகவும், ராஜஸ்தான் எம்.பி. கஜேந்திர சிங் மத்திய இணையமைச்சராகவும், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தனம் மத்திய இணையமைச்சராகவும், உத்தர பிரதேச மாநில எம்.பி. ஷிவ் பிரதாப் சுக்லா மத்திய இணையமைச்சராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபால் சிங் மத்திய இணையமைச்சராகவும் பதவியேற்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: