புதுதில்லி, செப். 3 –
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. 13 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் தமிழக மாணவர்களை நம்பவைத்து கழுத்தறுத்த நிர்மலா சீதாராமனுக்கு இணையமைச்சர் பொறுப்பிலிருந்து கேபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த யாரும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட வில்லை.

மோடி பிரதமராக பொறுப் பேற்ற பிறகு ஏற்கெனவே இரண்டுமுறை மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சிவ் பிரதாப் சுக்லா, அஸ்வின் குமார் சவுதே, வீரேந்திரகுமார், அனந்தகுமார் ஹெக்டே, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்ச ராக்கப்பட்டு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. முக்தர் அப்பாஸ் நக்வி, பியூஸ்கோயல் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமா ணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை இணை யமைச்சராக இருந்தார். அவருக்கு நிதித்துறை இணையமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது. பியூஸ் கோயலுக்கு ரயில்வே துறையும், சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகத்துறையும் ஒதுக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கும் என்றும் பாஜக ஆதரவு வேலை செய்து வரும் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் மைத்ரேயன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஆவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அமை ச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இதனால் இருவரும் அதிர்ச்சி யடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி கட்சிகளான சிவசேனை கட்சியும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து தமி ழகத்திற்கு விலக்கு பெற தாம் மிகவும் முயன்றதாகவும் ஆனால் நடக்க வில்லை என்றும் கேபினட் அமைச்ச ராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்த இவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது. நிதிஷ் குமார் கட்சிக்கு அமைச்ச ரவையில் இடம் கிடைக்காதது அவரது தலையெழுத்து என்று கூறியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நம்ப வைத்து கழுத்தறுப்பதில் மோடி வல்லவர் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: