திருப்பூர், செப்.3 –
ஊத்துக்குளியில் போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பேலீஸார் கைது செய்தனர். திருப்பூர், ஊத்துக்குளி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட புஞ்சை பாலத்தொழுவு அருகேயுள்ள செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் டி.அர்ஜூனன் (31). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஊத்துக்குளி பகுதியில் சென்றபோது, அவரை மறித்த இளைஞர் ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார். தொடர்ந்து அர்ஜூனனை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2000 பணம் மற்றும் செல்பேசி உள்ளிட்ட பொருள்களைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். இதுதொடர்பாக, அர்ஜூனன் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல், போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்யப்பட்டதாக மேலும் சில புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. இப்புகார்களின் பேரில் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை, ஊத்துக்குளி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தேனி மாவட்டம், உத்தமபாளையம், லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆர்.முத்து சுருளிக்குமார் (29) என்பதும், போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: