நாமக்கல்,

மாணவி அனிதாவின் மறைவிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு கலைந்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மறைவிக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் இந்தியா மாணவர் சங்கத்தினர் இன்று காலை 11 மணியளவில் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் ரஞ்ஜீத் குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் காயத்ரி, இளங்கதிர், மாவட்ட துணை செயலாளர் சக்தி உள்ளிட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.   திரளான  மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில்  மாநில துணை தலைவர் A .T .கண்ணன் கண்டன உரையாற்றினார்.

Leave A Reply