திருப்பூர்,

திருப்பூரில் பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே தனியார் பேருந்தும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply