திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை அருகே இன்று 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியில் மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் உள்ள 3 மாடிக் கட்டிடம் இன்று அதிகாலையில் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிடத்தில்  6 குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி கார்த்திக் என்பவரும் அவரது மகனும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply