லக்னோ,

கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பிகே. சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கோரக்பூர் மருத்துவமனையில் இந்த ஆண்டு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,317ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள பதிவேட்டின் படி ஜனவரி -152 குழந்தைகளும், பிப்ரவரி – 122 குழந்தைகளும், மார்ச் – 159 குழந்தைகளும்,ஏப்ரல் – 123 குழந்தைகளும், மே – 139 குழந்தைகளும், ஜூன் – 137 குழந்தைகளும், ஜூலை – 128 குழந்தைகளும், ஆகஸ்ட் மாதம் – 325 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: