கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய காரை தீ வைத்து கொளித்தினர். இது தொடர்பாக  காவலர்கள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.  இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: