கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக நமது நாட்டின் வேளாண் துறை முன்னேற்றம் அடைய கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் தனது பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார் எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பாக நாட்டில் அதிகளவில் விவசாய தற்கொலைகள் நடந்த போது வழங்கப்பட்ட இந்த பரிந்துரைகளை அரசு அதிகப்படியான விவசாய நெருக்கடிகளை சந்தித்த போதும், விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட போதும் நடைமுறைப்படுத்தவில்லை. இத்தகைய சூழலில் இந்தியாவில் பசுமைப் புரட்சியின் 50ஆம் ஆண்டு பற்றி நினைவு கூரும் நிலையில் பசுமை புரட்சியை உருவாக்கிய முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து நாளிதழுக்கு வழங்கிய பேட்டியின் சில பகுதிகள்:

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய விவசாயத்திற்கு உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஒரு பெரிய சவாலாக இருந்தது. தற்போது எது சவாலாக உள்ளது?
நம்முடைய இன்றைய வேளாண்மை முன்பு 2 முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று சூற்றுச் சூழல். இரண்டாவது பொருளாதாரம். நம்முடைய அடிப்படைவேளாண் சொத்துகளான நிலம், தண்ணீர் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பாதுகாப்பது மிகப் பெரிய சவால். இது தவிர வளங்குன்றா வேளாண்மையை எவ்வாறு செய்வது என்பது. உற்பத்தித் திறனை சூற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் உயர்த்துவது இன்றைய நடைமுறை தேவை. பஞ்சாப் மற்றும் பசுமைப் புரட்சி நடைமுறையில் இருந்த மாநிலங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. தண்ணீர் உப்புத் தன்மையாகிவிட்டது.

பசுமைப் புரட்சியின் போது 400-500 மில்லியன் இருந்த மக்கள் தொகை இன்று 1300 மில்லியன் என்ற அளவில் உள்ளது. மேலும் 2030-இல் 1.5 பில்லியன் மக்கள் தொகை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம் பயிரின் உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் விவசாயம் லாபகரமாகவும் வேண்டும். எனவே உணவு உற்பத்திச் செலவுகள் மற்றும் விவசாயத்திற்கு முன்பு உள்ள சவால்களை குறைக்க வேண்டும். அதாவது, பூச்சி, பூஞ்சாணம் மற்றும் களை பிரச்சனைகளை குறைக்க வேண்டும். இன்றைய சூழலில் விவசாயி களின் முதலீடுகளுக்கு உரிய வருமானம் கிடைக்க வில்லை. எனவே அவர்களால் வேளாண் கடன்களைகட்ட முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் சுற்றுச் சூழல் சவால்களும் அதிகளவு தோழில் நுட்ப தேவைகளை உருவாக்குகிறது.

மறுபுறம் பொருளாதாரச் சூழல் பொது கொள்கை தலையீடுகளின் தேவையை கொண்டுள்ளது. என்னுடைய 2006 அறிக்கையில் நான் பரிந்துரை செய்த சூத்திரத்தின் படி குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும்போது சாகுபடி செலவுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகம் வேண்டும் என்று கூறியுள்ளேன். இதன் வாயிலாக நமது நடைமுறையை குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இதனால் கொள்கை உருவாக்குபவர்களுக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2022 வருடத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி வருகிறது. ஆனால் கடந்த 2006 ஐக்கிய முற்போக்கு அரசுக்கு வழங்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரைகளை அவர்கள் அமல்படுத்த வில்லையே?
ஆமாம். அதனை நடைமுறைப்படுத்தாமல் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக உணவு பண வீக்கம் உயர்ந்து விடும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் தொகையில் பாதிப்பேர் விவசாயிகள். அவர்களும் சாப்பிட வேண்டாமா? நமது அரசு தனது பணியாளர்கள் பணவீக்க பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருக்க ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்றுள்ளது. ஆனால் விவசாயிகள் முன்னேற தேவைப்படும் அதிக வருமானத்தை தர மறுக்கிறது. நாம் தற்போதைய நடைமுறை சூழலை பார்க்கும் போது வேளாண் கடன் தள்ளுபடிகள் வாயிலாக அரசுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படும். ஆனால் வேளாண் விளை பொருட்களுக்கு தேவைப்படும் 20,000 கோடிகளை வழங்க தயாராக இல்லை மற்றும் குறைந்தபட்ச விலையை உயர்த்தவும் தயாராக இல்லை.

கடந்த 2009-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.72,000 கோடிகள் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசுகள் நீண்ட கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தவில்லை. ?மூன்று வழிகளில் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கலாம். குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிப்பு, அதிக விலையில் கொள்முதல் செய்வது மற்றும் அதிக உற்பத்தித் திறன் வாயிலாக மேலும் விற்பனை உபரியையும் வேளாண்மையில் உருவாக்க வேண்டும். மேலும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதையும் மேற்கொ ள்ள வேண்டும். உதாரணமாக நெல் வைக்கோலை சாப்பிடும் காளன்களாக மாற்றி விற்பனை செய்வது போன்ற நடைமுறைகளை நாம் காணவேண்டும்.

வேளாண் தற்கொலைகள் குறையவில்லை. இப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது?
நாம் வேளாண் தற்கொலைகளுக்கான உண்மை யான காரணத்தை ஆராயவில்லை. மாறாக கடன் செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலைகள் நிகழ்கிறது என்று எளிதாக கூறுகிறோம். மிக முக்கியமாக நமது தேவைகள் என்ன? விவசாய உற்பத்திச் செலவுகளை குறைப்பது, வேளாண் சவால்களை குறைப்பது மற்றும் அதிகப்படியான விலை கிடைப்பது போன்றவற்றில் நாம் உரிய கவனத்தை செலுத்த வேண்டும். தற்போதைய வேளாண் தற்கொலைகளுக்கு தீர்வு இழப்பீடு வழங்குவது கிடையாது. நான் விதர்பாவில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் அவர்கள் குடும்பம் தவிப்பதை கண்டு உள்ளேன். எனவே எங்களின் முதல் திட்டமாக விவசாயிகளின் குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டோம்.

நமது நாட்டில் விவசாயம் ஒரு முக்கியத் தொழில், விவசாயிகள் நம் நாட்டின் முக்கிய அங்கம். சீனாவில் நிலம் அரசுடையது. விவசாயிகள் ஒப்பந்தக்காரர்கள். நமது நாட்டின் நிலை வேறு. இங்கு நிலம் விவசாயிகளுக்கு சொந்தம். இத்தகைய பெரியதொழில் முனைவோர் கூட்டத்தை நாம் எவ்வாறு நடத்துகிறோம். நம்முடைய இன்றைய அனைத்துக்கொள்கைகளும் பெரு நிறுவனங்கள் தொடர்புடையது. நம்முடைய உணவுப் பாதுகாப்பு மற்றும் 50 கோடி விவசாயிகள் நிலை என்ன? நாம் அவர் களை குறைத்து நினைக்க வேண்டிய நிலை இன்று உள்ளது.

கடந்த 1967-68 களில் பசுமைப்புரட்சி நடைமுறையில் இருந்த போது உணவு பிரச்சனையை குறுகிய காலத்தில் தீர்க்க உதவியது. ஆனால் அதிகப் படியான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயர் விளைச்சல் ரகங்கள் காரணமாக சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய எதிர்வினைகளை எவ்வாறு சமாளிப்பது?

பசுமைப் புரட்சிக்கு பின் நான் வளங்குன்றா பசுமைப் புரட்சியை கொண்டு வந்தேன். இதன் வாயிலாக நமது சுற்றுச் சூழல் கெடாமல் நமது உற்பத்தித்திறனை பெருக்க முடியும். இதில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், ஒருங்கிணைந்த உர வழங்கல் மற்றும் விஞ்ஞான ரீதியாக நீர் மேலாண்மை போன்றவற்றின் வாயிலாக பசுமைப் புரட்சியின் போது ஏற்பட்ட பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடியும். இத்தகைய விஷயங்களை என்னுடைய 2016 ஆய்வுக் கட்டுரைகளில் தெரிவித்து உள்ளேன். மேலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பை செய்வது, பயிர் வகை தாவரங்களை மற்றும் தீவனப் பயிர்களை பயிர் சூழற்சியில் பயன்படுத்துவது, பஞ்சாப் போன்ற கோதுமை சாகுபடி செய்யும் விவசாயங்கள் மேற்கொள்வதே விவசாயத்தை பாதுகாக்கும் என்று தெரிவித்து இருந்தேன்.

மேலும் நாம் நல்ல வளமான நிலங்களை பாதுகாக்க சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை அமைக்கவும், விவசாயிகளுக்கு தேவையான தனிப்பட்ட அளவிலான வசதிகள் வாயிலாக உணவுப் பாதுகாப்பை நிறைவுசெய்யவும் வேண்டும். நில வள மேலாளர்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட நிலங்கள் கண்காணிக்கப்பட்டு மண்ணின் வளம் அதிகரிக்கப்பட வேண்டும். நமது பிரதமர் இஸ்ரேல் நாட்டுக்கு சமீபத்தில் சென்று வந்தார். அங்குள்ள பல நல்ல விசயங்களை நாம் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு தண்ணீரின் தேவை மற்றும் தேவை இல்லாத சூழல் பற்றிய தெளிவு உள்ளது.

குறைந்த நீரில் அதிக பயிர் சாகுபடி பற்றிய யோசனை நடைமுறையில் உள்ளது. நாம் இதனை இங்கு செயல்படுத்த வேண்டும். அங்கு இஸ்ரேல் தோட்டங்களில் எவ்வாறு தண்ணீர் தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவிகள் வாயிலாக கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை காண முடியும். அங்கு அனைத்தும் தானியங்கிகள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அவர்களுக்கு எந்தப் பகுதி நிலத்திற்கு தண்ணீர் தேவை என்பதை அறிந்து தேவைப்படும் அளவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. நாம் உற்பத்தித் திறனை தியாகம் செய்ய முடியாது. நிலம் சுருங்கி வரும் சூழலில் நிலத்தில் பயிரின் அளவு குறைந்து வரும் சூழலில் உற்பத்தித் திறனை தியாகம் செய்ய முடியாது. சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பங்களுக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மரபணு மாற்றுப் பயிர்கள் மூலம் பயிர் உற்பத்திப் பெருக்கம் செய்வது குறித்து பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. நம்முடைய உணவு பாதுகாப்பு சவால்களை சந்திக்க மரபணு மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமா?
பயிர்ப் பெருக்கத்திற்கு பல முறைகள் உண்டு. இதில் மூலக்கூறு தாவர பெருக்க முறையும் ஒன்று. மரபணு மாற்ற முறையில் நன்மையும் உண்டு. கெடுதலும் உண்டு. எனவே நாம் நன்மைகள் மற்றும் தீமைகளை கணித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முதலில் நமக்கு மரபணு விசயத்தில் இந்தியாவில் கட்டுப்பாடு ஒழுங்குமுறை வேண்டும். நமக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மரபணு மாற்று திட்டம் ஒரு உயிரியல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் கீழ் செயல்படுத்த வேண்டும். நாம் தொழில்நுட்பப் பயன்களை அறுவடை செய்யும் முறைகளை உருவாக்க வேண்டும். எங்கள் சுவாமிநாதன் அறக்கட்டளையில் நெல்லில் உப்பு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை உருவாக்கியுள்ளோம். இதற்கு மரபணு தொழில்நுட்பத்தை அலையாத்தி தாவரங்களில் பயன்படுத்தி நெல் உப்பு எதிர்ப்புத் தன்மை கொண்ட ரகங்களை உருவாக்கியுள்ளோம். நாம் மரபணுவை பயன்படுத்தும் சூழலில் அப்பிரச்சனைக்கு வேறு தீர்வுகள் இல்லாத சூழல் நிலவவேண்டும்.

தற்போது மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அமெரிக்காவை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் பல இடர்பாடுகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் மரபணு தொழில்நுட்பத்திற்கு தடை விதித்து விட்டன. உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக பசி குறியீட்டில் இந்தியாவின் நிலை மோசமாகி வருகிறது என்பதுடன் பசியை ஒழிக்கும் பத்தாயிரம் வளர்ச்சி இலக்குகளையும் சந்திக்க முடியவில்லை. இது குறித்து நாம் மேற்கொள்ள வேண்டியது என்ன? இந்தியா உற்பத்தியில் நன்றாக உள்ளது. ஆனால் நுகர்வில் இல்லை. நாம் மலைபோல் தானியங்களை ஒரு புறம் குவித்துவிட்டு மறுபுறம் பசியால் வாடுகிறோம். நம்முடைய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையே அமல்படுத்தி இப்பிரச்சனையை சந்திக்க வேண்டும். மேலும் நமது உணவு கூடையில் நாம் ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்களை சேர்த்து பெருக்க வேண்டும்.

நன்றி: தி ஹிந்து ஆங்கிலம் (ஆகஸ்ட் 16)
தமிழில் : தி.ராஜ்பிரவீன், உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave A Reply

%d bloggers like this: