பெரம்பலூர்:

இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி ஒருவரை, போலீஸ் இன்பார்மர் ஒருவர் செருப்பால் அடித்த காட்சி வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவரது இருசக்கர வாகனம் கடந்த 4 நாட்களுக்கு முன் காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஒருவர் விற்க முயல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையின் இன்பார்மர் என்று அழைக்கப்படும் ஒருவர் வாகனத்தை விற்க முயன்றதாக கூறப்படும் குருசாமி என்பரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் செருப்பால் அடித்து அவரை சாலையில் இழுத்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீஸ் இன்பார்மர் என்ற பெயரில் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: