சென்னை, செப்.3-
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்த லுக்கு எதிராக சிஐடியு செப்டம்பர் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சிஐடியு தமிழ் மாநிலக்குழு கூட்டம் செப்டம்பர் 1,2தேதிகளில் சென்னையில் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச்செயலாளர் வி.குமார், கே.திருச்செல்வன் உட்பட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் வாகன சோதனையின் போது, ஓட்டுநர் அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் காண்பிக்க வேண்டும். அவ்வாறு அசல் இல்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை என்ற தமிழக அரசு உத்தரவுக்கு சிஐடியு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. வாகன சோதனைகளின் போது நகல் ஆவணங்கள் ஏற்றுக்கொண்ட நடைமுறை யை மாற்றி அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டும் என்ற உத்தரவு அனைத்து மோட்டார் வாகன ஓட்டிகளையும் மற்றும் உரிமையாளர்களையும் பாதிப்படைய செய்துள்ளது.

பெரும்பாலான ஆட்டோ, லாரி, வேன், கார் ஓட்டுநராக பணிபுரிவோரின் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன உரிமையாளர் வாங்கி வைத்துக்கொள்வார். மேலும் அசல் ஆவணங்கள் பயணத்தின் போது பாதுகாப்பாக வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். போக்குவரத்துத் துறையில் ஆன்லைன் பயன்பாட்டில் உள்ளதை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகனபதிவு எண்ணை பதிந்தாலே ஆவணங்களின் உண்மைத்தன்மையை கண்டறியக் கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் வகையில் பிறப்பித்து ள்ள உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி 5.9.2017 அன்று அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மத்திய மோடி அரசு மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயப்படுத்தியதன் விளைவாக தமிழகத்தில் ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் வாய்ப்பு பறிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியான அனிதா தனக்கு இழைக்க ப்பட்ட அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடினார். பன்னிரண்டாம் வகுப்பில் தான் வாங்கிய மதிப்பெண் மருத்தவ படிப்புக்கு போதுமானதாக உள்ள போது மீண்டும் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு,அதனால் மருத்துவ படிப்பு பறிபோனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனதுஉயிரையே மாய்த்துக்கொண்டு ள்ளார். இந்த இளம் தளிரை போன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் லட்சியம் நிறைவேற முடியாமல் போனதற்கு நீட் தேர்வை வைத்து அரசியல் நடத்திய பாஜகவும், அதிமுகவும்தான் காரணம்.

Leave A Reply