தில்லி,

மானிய சிலிண்டரின் விலை ரூ.7.91 அதிகரித்துள்ளது.

சிலிண்டருக்கான மானியம் வரும் நிதியாண்டுக்குள் நிறுத்தப்படும் என்றும் மாதந்தோறும் ரூ.4 வீதம் விலை உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். இந்நிலையில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.7.91 அதிகரித்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.475.26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமற்ற சிலிண்டரின் விலை ரூ.74 அதிகரித்துள்ளது. இதேபோல் 19 கிலோ எடைகொண்ட மானியமற்ற சிலிண்டர் ரூ,1,167-க்கு விற்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: