நீ சாகத்தான்
வேண்டும் அனிதா

நீட்டின் வீரியம் உணரா
மாட்டு மூளைகளை உனக்கு தலைமையாய்
கொண்டாயே….

ரெட்டியாகவோ
ஷெட்டியாகவோ பிறக்காமல்
சூத்திரச்சியாக
பிறந்தாயே…

நீ சாகத்தான்
வேண்டும் அனிதா

காய்கறி விற்றோமா
கழுதை ஒன்றுக்கு
வாழ்க்கைப்பட்டோமா
என்றில்லாமல்
மருத்துவக் கனவு
கண்டாயே….

சாமியாரின்
பினாமியாகவோ
தொழிலதிபரின்
மகளாகவோ இல்லாமல்
போனாயே…

நீ சாகத்தான்
வேண்டும் அனிதா

1176 மதிப்பெண்களை
பெற கற்றுக்கொடுத்த
நம் கல்வி உனக்கு
வாழ கற்றுத்தர வில்லையே….

நீ சாகத்தான்
வேண்டும் அனிதா

மாட்டுக்காக கூடிய
நாங்கள் உன் போன்ற
மலர்களுக்காக கூடாமல் விட்டோமே

நீ மட்டுமல்ல
நாங்களும்
சாகத் தான் வேண்டும் அனிதா….

-டேனியல் Daniel Raja

Leave A Reply