அனிதா!….

என்ன பிழை செய்தாயோ
இளம் பிஞ்சு முகமே!…
தாய் இழந்து தந்தையின்
மூட்டை சுமையில்
தமிழ் நாடே திரும்பும் வகையில்
கல்வியில் சிறந்தது தவறா?….

குடிசையில் நீ வாழ்ந்து
கண் விழித்து கனவுகள்
விதைத்து ஈட்டிய
மதிப்பெண் சான்றிதழ்
வீட்டில் உறங்குவதை
நினைத்து நீ
ஆழந்து உறங்கினாயோ?….

நாடும் முழுவதும் ஒரே
கல்வி திட்டம் இல்லை
நாடும் முழுவதும் ஒரே
தேர்வு என பிஞ்சுகளின்
கனவை களைத்தெடுத்த
கொடிய மிருகங்கள்
வாழ்கின்ற நாட்டில்
நீ வீழ்ந்து விட்டாயே!…

சமநிலை இல்லாத
சமத்துவம் இல்லாத
ஆணதிக்கமுள்ள நாட்டில்
உனக்கென கனவு வளர்த்து
கரை சேர நினைத்தவளே!…
ஆறரடியில் கயிறு கொண்டு
கனவுகளுடன் உன்னை
வைத்து கண நிமிடத்தில்
கதை முடித்தாயே?….

தன் பதவி காக்க
மத்தியில் மண்டியிடும்
உயிரற்ற பிணங்களுக்கு
மத்தியில் நீ உயிர்
விட துணிந்தது ஏனடி?….
உன் மரணம் முற்றிலும்
என்னை முடக்குகிறதே?…

இனி ஏழைகளுக்கு
மருத்துவ படிப்பு இல்லை…
வீழ்வது யாராயினும்
வாழ்வது நானாகட்டும்
என்று நானும், நாமும்
இருந்து விட்டோம்!….
இறுக்கத்துடனும் இணங்கி
போக மறுக்கிறேன்!…
உன் இழப்பு என்னை
வதைக்குதடி கண்மணியே!..
வலிக்கிறது!…வலிக்கிறது!…

Gautam

Leave A Reply

%d bloggers like this: