அவளுக்குக் கிடைத்த ஒரே ஆயுதம்
அவளுடைய உடல் மட்டுமே.
அவளுக்குக் கிடைத்த துணை ஆயுதம் கயிறு மட்டுமே.

நீதி மன்றத்தைத்
தூக்கிலிட முடியவில்லை
தானே தொங்கி விட்டாள்.
அரசாங்கத்தை கொல்ல முடியவில்லை
தன்னையே கொன்று கொண்டாள்.

கனவு காணச் சொன்னவன் தேசத்தில்
ஒரு மருத்துவக் கனவு கலைந்த்தால்
இன்று பிணவறையில்
கூறு கூறாய்….

டெல்லி வரை தட்டியும்
கதவு திறக்கவில்லை
உயிர்க் கதவைச் சாத்திக் கொண்டாள்
ஒரே நிமிடத்தில்

சர்வாதிகாரியின் தோட்டத்தில்
தட்டான் பூச்சி பறக்க முடியுமா?
முட்டாள்கள் சாம்ராஜ்யத்தில்
குட்டி முயல் ஓட முடியுமா?

நாளை எரியும் நெருப்பில்
இவர்கள் அரசு எரிய வேண்டும்.
நாளை உதிரும் சாம்பலில்
டெல்லி உதிர வேண்டும்.

மாகாளி நின் ஆணை
அறம் வெல்ல வேண்டும்
அவன் அரியணை சாய வேண்டும்

சின்னக் குயில் சாபத்தால்
செத்தொழியட்டும்
இந்த தேசம்!

ஜெயதேவன்

Leave A Reply