புதுதில்லி;
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 9-ஆவது மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் ஞாயிற்றுக்கிழமை துவங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று சீனா செல்கிறார். இந்த பயணத்தின் போது சீன ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேச்சுவார்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா பயணத்தை முடித்துக் கொண்டு, செப்டம்பர் 5-ஆம் தேதி மியான்மர் செல்லும் மோடி, அங்கு 7-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: