===வே.மீனாட்சி சுந்தரம்===
முதல் உலக யுத்தம் முடிந்தவுடன், இரண்டுவிதமான அமைதி உடன் படிக்கைகள் உருவாகின.ஒன்று சோவியத் அரசிற்கும்ஜெர்மனி அரசிற்கும் இடையே ஏற்பட்ட பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க் அமைதி உடன் படிக்கை.

மற்றொன்று பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்றும் இணைந்து ஜெர்மனி அரசிடம் எழுதி வாங்கிய அடிமைச் சாசனமான வெர்செய்ல்ஸ் உடன் படிக்கை.
இந்த இரண்டு கடும் விளைவுகளை உருவாக்கிய விளைவுகள் உலக வரலாற்றிலே சிலிர்ப்பும் எழுச்சியும் கோபமும் ஊட்டுகிற ஒப்பந்தங்களாகும்.இதனை அறிய வேண்டுமானால் முதல் உலகயுத்தம் அதன் பின்னணிபற்றிய தகவல்கள் அவசியம். ஐரோப்பாவில் முதலாளித்துவம் எழுச்சி பெற்றவுடன் போர் எண்ணம் கொண்ட மன்னர்களின் ஆட்சிகள் (பிரான்சு தவிர) நீடித்தாலும் யுத்தத்திற்கான காரணங்கள் மாறிவிட்டன. அதாவது யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சி என்பது மாறி யுத்தம் என்றால் வர்த்தகம் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம் என்று ஆகிவிட்டது.

அன்று ஜெர்மனுக்கும் பிரிட்டனுக்கும் இடையே இருந்த வர்த்தகப் போட்டியே யுத்தத்தை கொண்டு வந்தது. பிரிட்டனுக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த காலனிநாடுகளின் பரப்பில் 10 சதவீதம் கூட ஜெர்மன் பேரரசிற்கு கிடையாது. ஆப்பிரிக்காவில் ஒரு சிறு பகுதியே அதற்கு காலனியாக இருந்தது. கடல் வழி வர்த்தகத்தில் பிரிட்டனே முதலிடத்தில் இருந்தது,ஜெர்மன் நிறுவனங்கள் அதனோடுபோட்டியிட முடியவில்லை.

ஜெர்மனியின் தொழில் நுட்ப ஆற்றலும், சரக்கு உற்பத்தித் திறனும் பிரிட்டனை விட பல மடங்காகும் இருந்தாலும்.தொழிலுக்குத் தேவையான இடுபொருள்கள் அனைத்தும் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த அடிமை நாடுகளிலிருந்து பெற வேண்டியிருந்தது. அதைவிட அது உற்பத்தி செய்யும் சரக்குகளுக்கான சந்தையும் பிரிட்டனைச் சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது. அன்று சர்வதேசச் செலாவணியாக பிரிட்டன் நாணயமும் ஆசிய ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா பகுதிகளில் இந்திய நாணயமான ரூபாயும் இருந்தது. (இன்று டாலருக்கு இருக்கிற அந்தஸ்து).

அன்று ஜெர்மனி மூலப்பொருள்களுக்கும் சந்தைக்கும் முடிந்த வரை அமெரிக்காவை பயன்படுத்தியது. அன்று நீராவி என்ஜினை விட திறன்மிக்க பெட்ரோலிய எரிபொருளால் இயங்கும் என்ஜினை கண்டுபிடித்தது ஜெர்மன் விஞ்ஞானிகள்.

அதே சமயம் அதனை பெருமளவு உற்பத்தி செய்ய தேவையான கனிம வளம் அமெரிக்காவிடம் இருந்தது.அமெரிக்கா அன்று பெட்ரோலிய எரிபொருளை, பெருமளவு உற்பத்தி செய்து உலகச் சந்தையில் விற்றது. ஆக ஜெர்மன் அமெரிக்க உறவு இருவரின் சந்தை நலனே .

பிரிட்டனுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மூலப்பொருள்களின் அட்சய பாத்திரங்களாக இருந்தன. பிரிட்டீஷ் பிரபுக்களின் கப்பல்கள் சரக்குபோக்குவரத்தில் ஆதிக்கம்செலுத்தின.

ஜெர்மன் முதலாளிகளின் அரசு தனது ஆயுத பலத்தைபெருக்கி பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு காலனிகளை கைப்பற்றி தனது தொழில்நுட்ப ஆற்றலால் உலக வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டது. பிரிட்டீஷ் கப்பல் போக்குவரத்தை நாசம்செய்ய நீர் மூழ்கி படகுகளை (U-BOAT) ஜெர்மன் தயாரித்திருந்தது.

பிரிட்டனின் கப்பல்படையும் இந்திய ராணுவமும் பிரான்சின் ஜெர்மனுக்கீடான தொழில் நுட்ப ஆற்றலும் அதன் காலனி நாடுகளிலிருந்து கிடைக்கிற அவசியமான இடுபொருள்களும் வெல்லமுடியாத சக்தி என்ற உணர்வு மேலிட்டு தாக்குதல் யுத்தம் மூலம் ஜெர்மனை பணியவைக்க முயற்சித்தன.

துவக்கத்தில் அமெரிக்கா வர்த்தகநோக்கத்தோடு நடு நிலை என்றது. ஜெர்மன் கூட்டாளிகளுக்கும் பிரிட்டனின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் விஷ வாயுக்கள், எல்லா ரக இயக்கங்களுக்கும் தேவையான என்ஜின்கள் அனைத்திற்கும் மேலாக பெட்ரோலிய எரிபொருள்கள் இவைகளை விற்று தங்கத்தை குவித்தது.

அன்று விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியால் போர் முறைகளே மாறியிருந்தன. பதுங்கு குழி, பீரங்கி, விஷ வாயு, முள்கம்பிவேலி, இவைகளை தாண்டி ஜெர்மனை நெருங்குவது கடினமாக இருந்தது. ஏராளாமான ராணுவ வீரர்களை பிரிட்டன்- பிரெஞ்சு ராணுவம் பலிகொடுக்கநேர்ந்தது,

ஜெர்மனி துவக்கத்திலேயே குளோரின் வாயுவை வீசி காலாட்படையை படுக்க வைத்தது. அதோடு பிரிட்டன் கப்பல் படையையும் சரக்குக் கப்பலையும் , பயணிகள் கப்பலையும் நீர் மூழ்கி படகு மூலம் ஜெர்மன் ராணுவம் மூழ்கடித்தது. அனைத்து போர் முனைகளிலும் இந்திய ராணுவ வீரர்களே முன் நின்றனர்.

ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் இந்த மூன்று நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்காவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் சீனாவிலும் 13 லட்சம் இந்திய ராணுவ வீரர் கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மேற்கு போர் முனையில் மட்டும் 47,746 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். 65126 ராணுவ வீரர்கள் நடைப் பிணமானார்கள்.

இந்தியாவில் பிரிட்டன் அரசின் தயவில் ராஜாக்களாகவும் நவாபுகளாகவும் இருந்தவர்கள் யுத்தத்திற்கு ஆதரவாக நின்றனர். உணவு,வெடி மருந்து இவைகளை சேகரித்து கப்பல் களில் பிரிட்டனுக்கு ஏற்றுமதிசெய்தனர். காங்கிரஸ்கட்சியும் காந்தியும் போரில் பிரிட்டனுக்கு தார்மீக ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

வேதனை என்னவெனில் அன்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் யுத்த எதிர்ப்புணர்வு மேலோங்கி வந்தது. அதற்கு காரணமிருந்தது, 19ஆம் நூற்றாண்டிலேயே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மார்க்சும், ஏங்கெல்சும் பங்களித்த சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கிய பாட்டாளி வர்க்க கூட்டுணர்வு, அதன் பிறகு பாட்டாளிவர்க்க கூட்டுணர்வை தட்டி எழுப்ப லெனின் தொடுத்த கருத்துப்போரால் இரண்டாவது அகிலம் உருவாக்கிய விழிப்புணர்வு எல்லாம் திரண்டு யுத்த எதிர்ப்பாக மலர்ந்தது.

அதிக ராணுவ வீரர்களை இழக்கநேர்ந்த இந்தியாவில் அது பிரதிபலிக்கவில்லை. அன்று அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியேறிய இந்தியர்களில் விடுதலை உணர்வு பெற்றவர்கள் கதார் கட்சி அமைத்து இந்திய விடுதலைக்கு ஆதரவாக குரல் எழுப்ப அங்குள்ள மக்களிடையே இயக்கம் நடத்தி வந்தார்கள்.

யுத்தம் தொடங்கியவுடனே கதார் கட்சியை சார்ந்தவர்கள் சொத்துக் களை விற்று இந்தியாவிற்கு வந்தனர். காலனிகளை மறு பங்கீடுசெய்ய நடக்கும் யுத்தம், இதில் இந்திய ராணுவம் பங்கேற்கக்கூடாது.

விடுதலை தந்தால் தான் ஒத்துழைப்போம், இல்லையெனில் ஒத்துழைக்க மாட்டேம் என்று ஒத் துழையாமை இயக்கத்தை நடத்திட அரசியல் கட்சிகளை வேண்டி துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்.

இந்த தருணத்தில் தான் ஆயுதம் தாங்கி போராட வேண்டிய அவசியமில்லை, ஒத்துழையாமையே விடுதலையை தேடித்தரும் என்று பிரச்சாரம்செய்தனர்.
பிரிட்டீஷ் அரசு இவர்களை கடுமையாக அடக்கியது.

கனடாவிலிருந்து காமகட்டமாரு என்ற ஜப்பானிய கப்பலில் வந்த பயணிகளை யுத்த எதிர்ப்பு இயக்கத்தினர் என்று கருதி கல்கத்தா துறைமுகத்தில் இறங்கு முன்னரே பிரிட்டீஷ் அரசுசுட்டுக்கொன்றது. அதில் சிலரே கதார் கட்சியை சேர்ந்தவர்கள். பெரும் பகுதி கனடாவில் குடியேறபோனவர்களை தடுத்ததால் ஊர் திரும்பும் உழைப்பாளிகள் . (இந்த படுகொலைகள் சம்பந்தமாக முழுவிவரம் புலம் பதிப்பகம் வெளியிட்ட பட்ஜ் பட்ஜ் படுகொலைகள் என்ற புத்தகத்தில் உள்ளது).

பிரிட்டனுக்கும் பிரான்சிற்கும் போரை தொடர்வது கடினம் என்ற நிலைவந்தபொழுது 1915இல் அமெரிக்கா ஜெர்மனை எதிர்த்து போரில் குதித்தது. வரலாறு திசை மாறியது.

.

Leave A Reply

%d bloggers like this: