சென்னை,

வடசென்னையை சேர்ந்த +2 மாணவர்கள் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் கிஷோர். இவர் கன்னிகாபுரம் மாநகராட்சி பள்ளியில் +2 படித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாகவே யாரிடமும் பேசாமல் தனிமையில் தனது செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு கிஷோர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவலர்கள் நடத்திய விசாரணையில் கிஷோர் செல்போனில் புளூவேல் கேம் விளையாடி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மதுரையை சேர்ந்த மாணவரும் , வெள்ளியன்று புதுச்சேரியில் ஒரு மாணவரும் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சென்னை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: