லக்னோ,

கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களும் முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக  கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா , மருத்துவர் கஃபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து  கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் தலைமறைவாக இருந்த மருத்துவர் கஃபீல் கானை காவலர்கள் இன்று கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: