ஸ்ரீஹரிகோட்டா,

ஒரு டன் கூடுதல் சுமையால் பி.எஸ்.எல்.வி. 36 ராக்கெட் தோல்வியை தழுவியதாக இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் ((IRNSS 1H)) செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி. 39 ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் செயற்கை கோளை நிலை நிறுத்தும் முயற்சியில் அது தோல்வியடைந்தது. ராக்கெட் ஏவுதலின் இரண்டாம் நிலையின் போது, ஒரு டன் எடை அதிகமாக இருந்ததால் தான், வெப்பக் கவசம் பிரிந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு  தோல்வியடைந்தது  என இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், எடையைக் குறைத்திருந்தால் ராக்கெட்டின் வேகம் குறைக்கப்பட்டு, செயற்கைக்கோள் பிரிந்து புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என கூறியுள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: