தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டை 70 லட்சம் முதல் 3 கோடி வரை விற்கலாம் அப்பொழுது தரம் குறையாது..

தனியார் மருந்து கம்பேனிகளிடம் கமிசன் பெற்று நோயாளிகளுக்கு நஞ்சை கொடுக்கலாம் அப்பொழுது தரம் குறையாது..

சிகிச்சை செய்கிறோம் என்கிற பெயரில் நோயளியில் உடலில் புதிய மருந்துகளை சோதிக்கலாம் அப்பொழுது தரம் குறையாது..

தனியார் மருத்துவ மனையின் வரும் நோயாளியின் சொத்து விரபரம் அறிந்து அதை எல்லாம் அவன் விற்கும் வரை பில் போடலாம் அப்பொழுது தரம் குறையாது..

தனியார் மருத்துவ மனையில் பிணங்களுக்கு கூட மாதக்கணக்கில் சிகிச்சை செய்து பில் போடலாம் அப்பொழுது தரம் குறையாது..

தனியார் தனியார் என ஊழலின் மொத்த உருவாய் திகழும் தனியாரின் பக்கம் என்றாவது உங்கள் சுட்டு விரல் நீண்டதுண்டா…

அட வெங்காயங்களா தமிழகத்தின் தரத்தை எல்லா தளங்களில் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திடமும் ஒப்பிட நாங்கள் தயார், நீங்கள் உருவாக்கிய ஒரு தரமான மாநிலத்தை காட்ட முடியும்…

ஒப்பிட கூட ஒரு தகுதி வேண்டுமடா…..

Muthu Krishnan

Leave A Reply