பாட்னா,

பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு எலிகள் தான் காரணம் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்ஜன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி  500-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். இந்நிலையில் வெள்ளம் குறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்ஜன் கூறுகையில், மாநிலத்தில், 21 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஏரிக்கரையோரம் வாழும் மக்கள் வீசும் உணவு பொருட்களை சாப்பிட எலிகள் வருகின்றன. அந்த எலிகள் ஏரிக்கரைகளை தோண்டி பாதிப்பை ஏற்பட்டடி விட்டன. இதன் காரணமாக கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. எலிகள் ஏற்படுத்திய குழிகளை கண்டுபிடித்து அவற்றை மூடி, 72 மணி நேரத்தில் ஏராளமான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்குவதில் இருந்து காப்பாற்றினோம் என்றார். மேலும் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் அஞ்சனி குமார் சிங் கூறுகையில், ” எலிகளால் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்த உடன், பொறியாளர்கள் விரைந்து செயல்பட்டு, ஏரிக்கரைகளை பலப்படுத்தினார் என்றார்.

மது விலக்கு அமலில் உள்ள பீகாரில் கடந்த மே மாதம் மாநில காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைத்திருந்த மது பாட்டில்கள் காணாமல் போன போது, மது பாட்டில்களை எலிகள் நாசம் செய்துவிட்டதாக காவலர்கள் தெரிவித்திருந்தனர். பின்னர் இது குறித்து நடத்திய விசாரணையை அடுத்து சட்டவிரோதமாக மது பாட்டிகளை விற்பனை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: